விளாத்திகுளம் அருகே ஆட்டோ,கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கருப்பசாமி(43) இவர் குளத்தூரில் சலூன் கடை நடத்திவந்துள்ளார். இந்நிலையில் குளத்துர் பகுதியை சேர்ந்த பேச்சுமுத்து என்பவரின் மகன் பாலமுருகன் (29) மற்றும் வேம்பார் பகுதியைச் சேர்ந்த சூசை என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் ஆகிய மூன்று பேரும் ஆட்டோவில் தூத்துக்குடி சென்று கொண்டிருந்தனர் ஆட்டோவை பாலமுருகன் ஒட்டி வந்துள்ளார், இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த மாயழகு என்பவரின் மகன் திருமுருகன் (50) உடன் 5 பேர் திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள தெற்கு கல்மேடு பாலம் அருகே காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆரோக்கியராஜ், பாலமுருகன் உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.