விளாத்திகுளம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.



தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெரு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குருசாமி (52), இவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி சென்று கொண்டிருந்தபோது,கீழஈரால் தனியார் கல்லூரி அருகே திருச்செந்தூரிலிருந்து சிவகாசி நோக்கி சென்ற கார் குருசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானதில், குருசாமி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார் குருசாமியின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக   அனுப்பி வைத்தனர்.


மேலும் விபத்து ஏற்படுத்திய விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் பால்கண்ணன் (42) என்பவரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.