விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த காத்தனத்தேவர் என்பவரின் மகன் சந்திர பாண்டியன் (65) இவர் நேற்று மாலை புதூரில் இருந்து சென்னம்பட்டி கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஐயரப்ப நாயக்கர் என்பவரின் மகன் கண்ணன் (44)என்பவர் புதூரில் இருந்து மாதலாபுரம் கிராமத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மடத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கார் எதிர்பாராத விதமாக சந்திர பாண்டியன் ஒட்டிய இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் சந்திர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இதனை அடுத்து சந்திர பாண்டியன் உடலை கைப்பற்றிய புதூர் காவல் நிலைய போலீசார், உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து,காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கண்ணன் என்பவரை பிடித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் ஒருவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026