விளாத்திகுளத்தில் விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (55), இவர் விளாத்திகுளம் மதுரை சாலையில்  கரும்புச்சாறு கடை நடத்தி வந்துள்ளார். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் வழக்கம் போல் 14-09-2024 சனிக்கிழமை இரவு  வீட்டில் குடித்து பிரச்சனை செய்த முருகன், வீட்டிலிருந்து கிளம்பி  சித்தவநாயக்கன்பட்டி செல்லும் அரசு மதுபான கடை அருகே காட்டுப்பகுதியில்   விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து இன்று காலை 15-09-2024 முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து சடலமாக  கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முருகனின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...