நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் மூவர்ண தேசிய கொடியேற்றிய பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்!



இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 79வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது, இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள்,மற்றும் பள்ளி,கல்லூரிகள், நீதிமன்றங்கள்,வீடுகள் பெரும்பாலான இடங்களில் தேசப்பற்றுடன் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில்  சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மூவர்ண தேசியக் கொடியை விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர்  சுப்பிரமணியன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு கவுன்சிலர்கள்பிரியா, செல்வகுமார்,ராமகாளியப்பன்,அழகுபால்ஆசாரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.