விளாத்திகுளம் அருகே எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு குளத்தூரில் கழகக்கொடியேற்றி கட்சியினர் கொண்டாட்டம்!
முன்னாள் முதல்வர் டாக்டர்.எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் அதிமுகவினரால் கொண்டாடப்படும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன்படி, குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அதிமுக கட்சி கொடி கம்பத்தில் கட்சியின் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் கழகக் கொடியேற்றி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பிறந்தநாள் வாழ்த்துக்கள் இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு முன்னதாக பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் படத்திற்கு மலர்கள் தூவி கட்சியினர் அனைவரும் மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.