அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் MLA  மார்கண்டேயன் திமுக கழக கொடியேற்றி  இனிப்பு வழங்கினார்.


திமுக  கழக பவள விழா மற்றும் பேரறிஞர். அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கழக கொடியேற்றி பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். 

இந் நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.