ஹிந்தியை எதிர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கு விடுதலைச்சிறுத்தை கட்சி சார்பில் வீரவணக்கம்!
1937-ல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்று அப்போதைய முதலமைச்சர் சி. ராஜகோபாலாச்சாரி ஹிந்தி கட்டாய மொழி என்று பேசினார் அப்போது தொடங்கிய இந்திய எதிர்ப்பு எழுந்தன, இதனை அடுத்து பெரியாரும் தனித்தமிழ் இயக்கங்களும் ஹிந்தி மொழியை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தனர், இதனை அடுத்து 1940-ல் கட்டாய இந்தியை கைவிடுவதாக அறிவித்தனர், இந்தப்போராட்டத்தின் போது நடராஜன்,தாளமுத்து ஆகியோர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து 1965- ல் மீண்டும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 1963 ஏப்ரல் 23- ம் தேதி அந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் ஆங்காங்கே ஒழிக்கப்பட்டது, இந்தப் போராட்டத்தின் போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி என்பவர் 1964இல் தீக்குளித்து உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்புக்காக நடைபெற்ற போராட்டத்தில் சென்னையில் சிவலிங்கம் என்பவரும், அரங்கநாதன் என்பவரும் தீக்குளித்து உயிரிழந்தனர், மேலும் முத்து,சாரங்கரபாணி,வீரப்பன் தீக்குளித்து உயிரிழந்தனர், இந்த இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் மற்றும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சடையாண்டி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
விடுதலைச் சிறுத்தை கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் சிறப்புரையாற்றினார்.
இந்தநிகழ்வில் விடுதலைச்சிறுத்தை கட்சி புதூர் ஒன்றிய செயலாளர் விஜயன், விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.