கோவில்பட்டியில் அதிமுக சார்பில் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 153 வது பிறந்த நாள் விழா தமிழகத்தின் உள்ள பல்வேறு அரசியல் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களால் என பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மோகன் வளர்மதி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் MRV கவியரசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா,நகர செயலாளர் விஜயபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.