விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  புதூர் கண்ணப்பர் தெரு பகுதியை சேர்ந்த கல்யாணி மூப்பனார் என்பவரின் மகன் காவடி (53), இவர் தெருவில்  அருகே உள்ள கம்மாயில் குளிக்க சென்ற போது வலிப்பு வந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்து காவடி உடலை கைப்பற்றிய புதூர் போலீசார், விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு  பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.