விளாத்திகுளம் அருகே வேளாண்மை துறை சார்பில் சத்துணவு - சிறுதானிய திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - சத்துணவு சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் திருவிழா நடைபெற்றது.திருவிழாவில் கோவில்பட்டி வேளாண் பல்கலைக்கழகம் ஸ்கேட் அறிவியல் நிலையம் ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட விதைப்பொருட்கள், வேளாண் உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவை கண்காட்சி படுத்தப்பட்டிருந்தது. நடைபெற்ற திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கண்காட்சியை தொடங்கி வைத்து விவசாயிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு வேளாண் உபகரண பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார்,மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அல்லிராணி,மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி மையம் தமிழ்ச்செல்வி வேளாண்மை உதவி இயக்குனர் மலர்விழி வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் வேளாண்மை துணை இயக்குனர் தோட்டக்கலை சுந்தர்ராஜ், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் வெற்றிமற்றும் கழக நிர்வாகிகள் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.