விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் முதியோர் இல்ல மேலாளர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் சுற்றுவட்டார கல்வி வளர்ச்சி குழு இணைச்செயலாளரும்,நாகலாபுரத்தில் இயங்கி வரும் தேனம்மாள் முதியோர் இல்ல மேலாளர் பரமசிவன் என்பவரின் மகன் சேகர் (62), வீட்டிலிருந்து முதியோர் இல்லத்திற்கு தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பள்ளிவாசல்பட்டி பாலம் அருகே ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த மாரி பாண்டி என்பவரின் மகன் மெரினின் (18) என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சேகர் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார், இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய மெரினின் என்பவரைபிடித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.