கொல்லன்பட்டறையில் குண்டூசியை தேட அவசியமில்லை : விளாத்திகுளம் கிழக்கு தெற்கு பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும்,திமுக வேட்பாளருமான மார்கண்டயேன் விருசம்பட்டி,வேடபட்டி,மாமு நைனாபுரம்,நெடுங்குளம், துவரந்தை, ஈ.வேலாயுதபுரம் பல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பல்லாகுளம் கிராம மக்களிடம் பேசிய திமுக வேட்பாளர் மார்கண்டயேன் " கொல்லன்பட்டறையில் குண்டூசியை தேட அவசியமில்லை " என்பது போல் பல்லாகுளம் கிராம மக்களிடம் நான் ஓட்டு கேட்டு தான் நீங்கள் ஓட்டு போடும் அவசியம் இல்லை, நான் இந்த கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன், இந்த கிராம மக்களிடம் உங்களின் ஒருவனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் தற்போது வரை இருந்து வருகிறேன், என அக்கிராம மக்களுக்கு செய்த சேவைகள் குறித்து திமுக வேட்பாளர் மார்கண்டயேன் வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன்,பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் சடையாண்டி, விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சபாபதி, திமுக நிர்வாகி பாண்டியராஜன் கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.