விளாத்திகுளம் அருகே கீழ் ரூ.34.40-லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பசுவந்தனை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.40-லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும்,15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.45-லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.உடன் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.