தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்திலிருந்து ரெட்டியபட்டி வரை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்ட திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சத்து  58 ஆயிரம் மதிப்பில், 1.600 கி. மீ தூரம் தார் சாலை மற்றும் இரண்டு சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைக்கான 5 வருட பராமரிப்புத் தொகை 5.76 லட்சம் ஒதுக்கப்பட்டு தார் சாலை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. புதிதாக போடப்பட்டுள்ள சாலை வழியாகத்தான், ரெட்டியபட்டி, மகாராஜபுரம், சங்கரப்பநாயக்கன்பட்டி, கன்னிமார்கூடம், நெடுங்குளம், பல்லாகுளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அன்றாட தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.ஆனால் புதிதாக போடப்பட்டுள்ள சாலை மழையோடு போடப்பட்டதாகவும்கிராம மக்கள் கூறியும், மழையோடு சாலை அமைத்ததால், சாலை மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,கையால் பெயர்த்தால் கையோடு வந்து விடுகின்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

எனவே சாலையை முறையாக அமைக்க வேண்டும் என்று  அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.