விளாத்திகுளம் அருகே ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மல்லீஸ்வரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஒன்றிய பொறியாளர் ரவிசங்கர், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் கிளை பிரதிநிதிகள் காளிச்சாமி,சுரேஷ் கழக உறுப்பினர்கள் கருப்பசாமி,மணி புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.