புதூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய மாவட்ட செயலாளர்..!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு கட்சிக்காக உழைத்த இளைஞர்கள் போன்ற புதிய முகங்களை தேர்ந்தெடுக்கும் வகையில் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர் பதவிகளை அறிவித்து கட்சியினரிடமிருந்து விருப்பமனுக்களைப் பெற்று தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளராக கட்சி நிர்வாகி சடையாண்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்நிலையில், புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள சடையாண்டி உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் புதூரில் உள்ள சட்ட மாமேதை அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் சடையாண்டிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.