ரூ.17.50-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு!  


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கைலாசபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ.17.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.1.50- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.


நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தாந்தர் உட்பட திமுக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.