"NEET கஷ்டமெல்லாம் இல்ல.... படிச்சா ஈஸி தான்..." : 7.5% இட ஒதுக்கீட்டால் மருத்துவராகும் டெய்லரின் மகள் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த எட்டையபுரம் அரசுப்பள்ளி மாணவி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும் வென்றான் கிராமத்தைச் சேர்ந்த எம்பெருமாள் - முத்துக்கனி தம்பதியினரின் மகளான சோலை மலர்க்கொடி என்ற அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தற்போது விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தனது மருத்துவராகவும் கனவை நினைவாக்கியுள்ளார்... மருத்துவ மாணவியாக தேர்வாகியுள்ள சோலை மலர்கொடியின் தந்தை எம்பெருமாள் அப்பகுதியில் விவசாயமும், டெய்லராக வேலை செய்தும், அவரது தாய் முத்துக்கனி விவசாயக் கூலி வேலையும் பார்த்துக் கொண்டு இருவரும் தங்களது மகளின் மருத்துவராகும் கனவிற்கு மிகவும் உறுதுணையாக இருந்து மாணவி நீட் தேர்விற்கு தயாராக பக்கபலமாக இருந்துள்ளனர். மேலும், நீட் தேர்வில் முதல் முயற்சியில் தோல்வியை கண்ட மாணவி சோலை மலர்க்கொடி மனம் தளராமல்.. வேறு படிப்புகளிலும் சேராமல் தனது இலக்கான மருத்துவராகவும் கனவை மனதில் வைத்துக் கொண்டு விடாமுயற்சியாக படித்து நீட் தேர்வில் இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்று 7.5% இட ஒதுக்கீட்டில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். ஏழ்மையின் பின்னணியில் தவித்து வரும் இக்குடும்பத்தில் இருந்து முதலாவதாக மாணவி சோலை மலர்க்கொடிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது அம்மாணவி மற்றும் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமத்திற்கே மகிழ்ச்சியையும், பெருமையும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
இதுகுறித்து சாதனை மாணவி சோலை மலர்கொடி பேசியபோது;
"நீட் தேர்வு என்றாலே கஷ்டம் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கிறது... ஆனால் அப்படியெல்லாம் இல்லை எனக்கும் நீட் தேர்வு பற்றிய முதலில் தெரியாது.. நீட் கஷ்டமெல்லாம் இல்லை, படித்தால் எல்லாம் ஈசி தான்..., நீட் கஷ்டம் இல்லை என்ற எண்ணத்தோடு படியுங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நீட் தேர்வுக்கு தயாராகும் மற்ற மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
"விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான் 1 முதல் 10-ம் வகுப்பு வரை எப்போது வென்றான் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று 425/500 மதிப்பெண்கள் பெற்றேன், 11,12 வகுப்புகளை எட்டையபுரம் அரசு மகளிர் பள்ளியில் பயின்று 500/600 மதிப்பெண்களும் பெற்றேன். +2 விற்கு தனது மருத்துவராகவும் கனவை ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் கூறினேன்.. அப்போது ஆசிரியர்கள் எனக்கு கொடுத்த வழிகாட்டுதலின் படி நீட் தேர்வுக்கு தயாராகி தற்போது நீட் தேர்வில் 486 பெற்று விருதுநகர் மருத்துவ கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது" என்றும் தனக்கு 5 ஆண்டுகள் மருத்துவப்படிப்புக்கு பின் நரம்பியல் சம்பந்தமான மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறினார்...