விளாத்திகுளம் அருகே உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்!
உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜெகவீரபாண்டியபுரம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு வேளாண் இடு பொருட்களை வழங்கிய நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ் சௌமியன்,வேளாண் பொறியியல் துறை,செயற்பொறியாளர் மகேஷ் தோட்டக்கலை உதவி இயக்குநர் சண்முகசுந்தரம்,ஒட்டப்பிடாரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் லக்ஷ்மி நாராயண பிரியா, உட்பட கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.