விளாத்திகுளம் அருகே கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு : விஜயகாந்த் பாணியில் ஊர் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம்!
தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரையாளுமையாளும், எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளரும் , தனது கடின உழைப்பால் பொது வாழ்வில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பல்வேறு அமைப்பினர் பிறந்தநாள் புகழாரம் தெரிவித்து வருகின்றனர், அதேபோல் தேமுதிகவினர் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,அன்னதானம் வழங்கி வருகின்றனர்,
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கல்குமி - சிங்கிலிபட்டி கிராமத்தில் கேப்டன் விஜயகாந்தின் 73 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதூர் மேற்கு ஒன்றிய தேமுதிகவினர் சார்பில், விஜயகாந்தின் பாணியில் ஜாதி.மத பேதமின்றி, ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலை போட்டு சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது, அதற்கு முன்னதாக விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு தீபாதாரணை காட்டி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சிங்கிலிபட்டி தேமுதிக கிளைச் செயலாளர் சங்கரன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வீரோவன், சிங்கிலிபட்டி,கல்குமி தேமுதிக நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றி நிர்வாகிகள்,கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.