விளாத்திகுளம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டுவதற்கான கட்டுமான பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன்கோடாங்கிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டுமென்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தை தொடர்ந்து, அக்கிராமன் மக்களின் கோரிக்கையை ஏற்று, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32-லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.