விளாத்திகுளம் அருகே தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி..." - பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்!



நகைகள் முதல் ஆட்டுக்கிடாய்கள் வரை மருமகளுக்கு சீதனமாய் வழங்கிய தாய் மாமன்கள்- விளாத்திகுளம் அருகே களை கட்டிய பூப்பனித நீராட்டு விழா!




திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற ஒவ்வொரு விழாக்களிலும் சீர்வரிசை கொடுப்பது என்பது தமிழகத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவிற்கு தாய்மாமனுக்கு முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தையில் ஜெயராம் - ராசாத்தி இளைய தம்பதியின் மகள் மதி ராகினி பூப்பனித நீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மதிராகினி தாய் மாமன்கள் தங்க நகைகள்,புத்தாடைகள், மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளுடன் அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 101 வகைகளில் சீர்வரிசை ,  12 அண்டா, 4 குத்து விளக்குகள் , ஆறு கிடாய் ஆடுகள் என இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு லோடு ஆட்டோ என மூன்று வாகனங்களில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கைகள் சிதறடிக்க ஊர்வலமாக கொண்டு வந்து மருமகளுக்கு சீர் செய்து அசத்தினர்.