விளாத்திகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உப்பள  தொழிலாளி உயிரிழப்பு...


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மகன் மாரியப்பன் (51) உப்பளத் தொழிலாளியான இவர் பனையூரில் இருந்து தெற்கு கல்மேடுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த  மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து மாரியப்பனின் உடலை மீட்ட தருவைகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.