விளாத்திகுளம் அருகே மது போதையில் உதவி ஆய்வாளரை சட்டையை பிடித்து கீழே தள்ளிய மது போதை ஆசாமிகள் 4 பேர் கைது- இரண்டு பேருக்கு போலீசார் வலைவீச்சு ! 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் காட்டுப் பகுதியில் கழிவறைக்கு செல்லும் பொழுதும் தண்ணீர்   பிடிக்கும் பொழுதும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மது போதையில்  பெண்கள் மீது டார்ச் லைட் அடிப்பதும் , பெண்களை கேலி செய்வதும் வருவதாக  மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இரவு மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்றுள்ளனர் அப்பொழுது அங்கு மது போதையில் மது அருந்து கொண்டிருந்த நான்கு இளைஞர்களை கூப்பிட்டு சத்தம் போட்டு வீட்டுக்குப் போக சொல்லி அறிவுரை கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் கலந்து செல்லாமல் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை அந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தபோது இளைஞர்கள் கலந்து செல்லாமல் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.



இதனை  பார்த்த உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் மற்றும் போலீசார்  உங்களை நான் வீட்டுக்கு போகச் சொன்னேன் ஏன் வீட்டிற்கு இன்னும் செல்லாமல் இருக்கிறீர்கள். உடனே வீட்டுக்கு போங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார், இதனால் டென்ஷனான மது போதையில் இருந்த இளைஞர்கள் மது தலைக்கு ஏறி போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் காவல் உதவி ஆய்வாளரிடம் ஒருமையில் பேசியும் அசிங்கமாக பேசியும் வாக்குவாதம் செய்து உள்ளனர் வாக்குவாதம் முற்றியதும் காவல் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்  மேலும் உதவி ஆய்வாளர் வந்த வாகனத்தின் சாவியை பறித்துக் கொண்டு போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களை சத்தம் போட்டதும் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். சாவி கிடைக்கவில்லை  நீண்ட நேரமாக உதவி ஆய்வாளர் மற்றும் உடன் சென்ற காவலர் காவல் நிலையம் திரும்ப முடியாமல் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சாவியை வாங்கி கொடுத்துள்ளனர். இது குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (30), மகேஸ்வரன் (30), ராமகிருஷ்ணன் (24), கருப்பசாமி (21), பாண்டி, ராசுகுட்டி ஆகிய 6 பேரும் காவல் உதவியாளர் மற்றும் போலீசாரிடம் மதுபோதையில் அவதூறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து உதயகுமார் (30), மகேஸ்வரன் (30), ராமகிருஷ்ணன் (24), கருப்பசாமி (21) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர். மேலும் பாண்டி, ராசுகுட்டி ஆகியோரை தேடி வருகின்றனர்




மது போதையில் போலீசாரை அவதூறாக பேசியது மட்டுமின்றி, உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு, பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடிய போதை ஆசாமிகள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.