எட்டயபுரம் அருகே இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் 4.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 72 குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக  திறந்து வைத்த  முதல்வர்!



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி  இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 4.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 72 குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்


இதனைத் தொடர்ந்து தாப்பாத்தி முகாமில் நடைபெற்ற நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, உள்ளிட்டோர்

இந்நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவியை வழங்கினர். மேலும் புதிதாக கட்டப்பட்ட  குடியிருப்புகளை பார்வையிட்டு  மரக்கன்றுகளை நாட்டினார்  அது மட்டுமின்றி 21 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமூக நலக்கூடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.