" வெற்றிவேல் வீரவேல் " முழக்கமிட்டு விளாத்திகுளம் அதிமுக வேட்பாளரை வரவேற்ற NDA கூட்டணி கட்சியினர்!



அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக புதுமுகமாக களம் இறங்கிய சத்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று விளாத்திகுளம் NDA கூட்டணி கட்சியினரிடம் அறிமுகமாக விளாத்திகுளம் வந்தார், முன்னதாக விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தி பின்னர் ஆரவாரத்துடன் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வருகை தந்தார்.

விளாத்திகுளத்திற்கு வருகை தந்த அதிமுக வேட்பாளர் சத்யாவை NDA கூட்டணி கட்சியினர், பட்டாசுகள் வெடித்து  “ வெற்றிவேல் வீரவேல் ” என்று முழக்கமிட்டு சால்வை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு  உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைத்து கூட்டணி கட்சியினரும் முழு ஒத்துழைப்பு தந்து விளாத்திகுளம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை  வெற்றி பெற செய்ய வேண்டும் என்று  அதிமுக வேட்பாளர் சத்யா  கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.