எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், சேதமடைந்து காணப்படும் சுடுகாட்டை சீரமைக்க வேண்டும், எட்டையபுரம் பேரூராட்சி பகுதியில் வாறுகாலில் கழிவு நீர் தேங்காமல் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எட்டயபுரம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அனைத்து வார்டு பகுதிகளும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டயபுரம் பாரதியார் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்,தலைமை வழக்கறிஞர் பாண்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன்,விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ரமேசுகுமார், தொகுதி செய்தித்தொடர்பாளர் பாலாஜி,கோவில்பட்டி தொகுதி தலைவர் தங்கமாரியப்பன், எட்டயபுரம் நகர செயலாளர் வழக்கறிஞர் சதிஷ்குமார், நகர தலைவர் செல்வகுமார்,நகர தொழிற்சங்கபேரவை செயலாளர் பரஞ்ஜோதி,தொகுதி இணைசெயலாளர் அழகு முனியசாமி,ஒன்றியசெயலாளர்கள்உத்தண்ட்,சண்முகதாஸ்,சண்முகராஜ்,செல்வராஜ்,ராமசந்திரன்,மற்றும் இளைஞரணி சோலைகணேஷ் கடலையூர் ராஜ்குமார்உள்பட மகளிரணி பலர் கலந்து கொண்டனர்.