தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.புதூரில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாஜகவினர் சார்பில் புதூர் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தையும், முறைகேட்டையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது பேசிய பாஜக நிர்வாகி பழனி முருகன், புதூர் பேரூராட்சியின் சார்பில் சமீபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றதாகவும், அதில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ரூ.10 லட்சத்தை மட்டும் செலவு செய்து விட்டு ரூ.30 லட்சத்தை திருடியுள்ளதாக கூறி பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, பேரூராட்சி பகுதியில் கால்வாய், பொது மயானம், குடிநீர் வசதி என எதுவுமே முறையாக பேரூராட்சி சார்பில் செய்யப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மீது அக்கறை இன்றி செயல்பட்டு வரும் பேரூராட்சி நிர்வாகத்தினர் 10 நாட்களுக்குள் உடனடியாக மக்களின் குறைகளை சரி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் பாஜக சார்பில் பேரூராட்சி நிர்வாகம் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்குத்தொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை திரு எஸ் பழனி முருகன் அவர்கள் ஒன்றிய பொதுச் செயலாளர் புதூர் சிறப்பு விருந்தினர்கள் திரு பார்த்திபன்,தெற்கு ஒன்றிய தலைவர் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய தலைவர் திரு சுயம்பு,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர்,ஓ பி சி அணியின் மாவட்ட செயலாளர் திரு மகேஷ் ,புதூர் ஒன்றிய மகளிர் அணி பொதுச் செயலாளர் திரு அஷ்டலட்சுமி, எஸ் சென்றாய பெருமாள்சாமி, மாவட்ட ஐடி வின் செயலாளர் மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு கண்டன ஆர்ப்பாட்ட உரை நடத்தியவர் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் திரு கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.30 லட்சத்தை திருடிய பேரூராட்சி நிர்வாகம் - பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீப்பெட்டி தொழிலாளர்களின் பிள்ளைகள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பு!
அடுத்த
அரசு வழங்கிய நிலத்தில் ஆக்கிரமிப்பு : நிலத்தை மீட்டு தர மூதாட்டி குடும்பத்தினர் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026