விளாத்திகுளத்தில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்கிட்டு தற்கொலை?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்- சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவரின் மகன் ரத்தினராஜ் (35),இந்நிலையில் ரத்தினராஜின் தாய் முத்தம்மாள் (80) நேற்று (11-12-2024) புதன்கிழமை காலை வயோதிகம் காரணமாக உயிரிழந்துள்ளார், இந்நிலையில் இறந்த தாயின் அருகே ரத்தினராஜ் நாள் முழுவதும் சோகத்தில் இருந்ததாகவும், இதனால் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது, இதனால் 12-12-2024 வியாழக்கிழமை அதிகாலை ரத்தினராஜ் தாயை இழந்த துக்கத்தால் வீட்டின் ஆட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ரத்தினராஜின் உடலை மீட்ட விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் ரத்தினராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தாய் இறந்த துக்கம் தாளாமல் அதேநாளில் மகனும் உயிரிழந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது....