விளாத்திகுளம் அருகே வீட்டிலிருந்த தாய், மகள் மர்மமான முறையில் மரணம் - தடயவியல் நிபுணர்களை வரவழைத்து  மாவட்ட எஸ்.பி நேரில் வந்து தீவிர விசாரணை...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த பூவண் என்பவரது மனைவியான (75) வயது மூதாட்டி சீதாலட்சுமி அவரது கணவர் பூவண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மகளான ராமஜெயந்தி (47) என்பவருடன் மேலநம்பிபுரத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை வீட்டிலிருந்த மூதாட்டி சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ராமஜெயந்தி இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் வந்த போலீசார் மர்மமான முறையில் அவர்களது வீட்டில் உயிரிழந்து கிடந்த மூதாட்டி சீதாலட்சுமி, அவரின் மகள் ராமஜெயந்தி ஆகிய இருவரின் உடல்களையும் பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களை வரவழைத்தும், அக்கம்பக்கத்தினரிடம் இந்த மர்ம மரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.... 


அதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.



(இச்சம்பவத்தில் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடக்கும் இருவரும் கழுத்து மற்றும் கைகளில் அணிந்திருந்த நகைகள் இல்லை என்பதால் நகைக்காக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது..)