17 வயது சிறுமி கொலையை கண்டித்து  விளாத்திகுளத்தில் 30க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் அடைப்பு !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில்  கடந்த 11ஆம் தேதி  அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  17 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யாததை கண்டித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில்  பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என பல்வேறு அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்,தற்போது வரை சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து குடும்பத்தினர் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




17 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து  விளாத்திகுளம் பேருந்து நிலையம், மதுரை ரோடு,எட்டையாபுரம் சாலை,வேம்பார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட செல்போன் கடைகளை அடுத்து செல்போன் கடை உரிமையாளர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.