தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களை முறையாக கணக்கீடு செய்யாமல் 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டுகளுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும், மழையால் முற்றிலுமாக பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்காததை கண்டித்தும் இப்போது விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையை மறித்து அமர்ந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையும், இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீடு கம்பெனியான "IFFCO TOKIO"-யை மாற்றுவதோடு மட்டுமின்றி, மழை வெள்ள நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழக அரசு உடனடியாக விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சேதமடைந்த அனைத்து பயிர்களை முறையாக கணக்கீடு செய்து காப்பீடு மற்றும் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவிலான சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்...
Vilathikulam
200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை விபத்தில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு கபடி குழுவினர் ரூ.1 லட்சம் நிதியுதவி!
அடுத்த
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026