விளாத்திகுளம் அருகே காற்றாற்று வெள்ளத்தின் காரணமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு : மேம்பாலம் அமைத்தர பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரத்தில் இருந்து நாவலக்கம்பட்டி,குமாரட்டையாபுரம்,கருப்பூர்,மீனாட்சிபுரம்,மலைப்பட்டி,நரிப்பட்டி,வீரப்பட்டி, தோல்மலைபட்டி, முத்தலாபுரம், வீரப்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு செல்லும் கிராமப்புறசாலை நாவலக்கம்பட்டி கிராமம் அருகே காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது காரணமாக சாலையில் அரிப்பு ஏற்பட்டதால்,பேருந்து போக்குவரத்து மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை காரணமாக பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்டது, காற்றாற்று வெள்ளத்தை யாரும் பார்க்க செல்ல வேண்டாம் என்று சாலைகளில் போலீசார் பேரி கார்டுகளை வைத்து தடுப்புகள் அமைத்தாலும், அதையும் மீறி பொதுமக்கள் அவற்றை பெரிது படுத்தாமல் காற்றாற்று வெள்ளநீரை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
காற்றாற்று வெள்ளம் காரணமாக அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.