விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் மோத்தபாளையம் பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 18 பேர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சாமிதரிசனம் செய்வதற்காக ஒரு சுற்றுலா வேனில் வந்து கொண்டிருந்தனர், வேனை கோயம்புத்தூர் மாவட்டம் குன்னியூர் பகுதியை சேர்ந்த பத்திரப்பன் என்பவரின் மகன் சுரேந்திரன் (44) என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேன் தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் காவல் நிலையம் அருகே உள்ள பேரிகார்ட் வளையும்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த ராஜேந்திரன்(58), லட்சுமிதா(28), கிரிஜா(46), பழனிச்சாமி(55), சிவக்குமார் (47), கலைவாணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது, இதனை அடுத்த உடனடியாக எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் காயமடைந்தவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், இந்தவிபத்து குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.