விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 12ம் மாணவியின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கிய MLA!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குறளயம்பட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கி உயிரிழந்த 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி செல்வி.முத்து கௌசல்யா அவர்களின் குடும்பத்தாரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.4லட்சம் அடங்கிய காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
உடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ராணி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.