எட்டையபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களுக்கு பிடித்த துறையில் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து அங்கு பயிலும் 90 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், ராஜா மேல்நிலைப்பள்ளி செயலர் ராம்குமார் ராஜா தலைமை தாங்கிய இந்நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, தலைமை ஆசிரியர் பழனி குமார், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வார்டு செயலாளர்கள் சின்னப்பர்,அருள் சுந்தர், பேரூராட்சி கவுன்சிலர் மணிகண்டன், நகரத் துணைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் முருக லட்சுமி, மஞ்சமாதா உள்பட ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.