விளாத்திகுளத்தில் திமுகவினர் சார்பில் அண்ணல் அம்பேத்கருக்கு MLA மார்கண்டேயன் மரியாதை ! 


சட்டமாமேதை டாக்டர். அம்பேத்கரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்சியினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,  விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் சடையாண்டி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,மாவட்ட பிரதிநிதி புதுராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பரமசிவம்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.