விளாத்திகுளம் அருகே மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தற்போது தமிழக முழுவதும் இது தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக சேதம் அடைந்த படகுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்து நான்கு கிராமங்களை சேர்ந்த 25 மீனவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா 10000 ரூபாய் வழங்கினார்,மேலும் அரசின் சார்பில் உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.