பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பராபுரம் ஊராட்சி கழுகாசலபுரம் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அதேபோல் சின்னமலைக்குன்று ஊராட்சி திப்பனூத்து கிராமத்தில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும், நாவலக்கம்பட்டி கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும், குமரெட்டியாபுரம் ஊராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியும், மீனாட்சிபுரம் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கும், அய்யாக்கோட்டையூர் ஊராட்சி வெங்கடாச்சலபுரம் கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் சுரேஷ்குமார், மாடசாமி எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் சின்னப்பர் ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி அர்ச்சனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.