விளாத்திகுளம் அருகே புதூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் 2 அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டான ராஜாஜி தெரு மற்றும் 9-வது வார்டான அம்பேத்கர் தெருவில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையங்கள் போதுமான கட்டிட வசதி இல்லாமல் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த நிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.15 லட்சம் வீதம் இரண்டு தெருக்களிலும் 2 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிக்கான ஒப்பந்தமிடப்பட்டுஅதற்கான பணிகள் துவக்க விழா இன்று புதூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரிடம், தரமான முறையில் விரைவாக கட்டிமுடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். நிகழ்ச்சியின் போது, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இதில் புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், அரசு அலுவலர்கள், பேரூராட்சி மன்ற தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.