விளாத்திகுளம் அருகே கண்மாயை சீரமைக்கும் பணியை MLA மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திராபுரம் கிராமத்தில் 5-ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் மடையை சீரமைப்பதற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கிராமத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி வேப்ப மரங்களை நடுவதற்கு கிராம மக்களிடம் அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் ஒன்றிய பொறியாளர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்புலட்சுமி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.