விளாத்திகுளம் அருகே மழை வெள்ள பாதிப்புகளை MLA மார்கண்டேயன் பார்வையிட்டார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் நேற்றைய தினம் பெய்த மழையினால் ஊராட்சி, குளம் உடைந்து விருசம்பட்டி கிழக்குப் பகுதி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களை முகாம்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்து வெள்ளை நீரை வெளியேற்றுவதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
உடன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.