விளாத்திகுளம் அருகே வெம்பூர் கிராமத்தில் கழிவுநீர் அகற்றும்பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நீராவியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு நீராவியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிடவும் நீராவியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றிடவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் வெம்பூரை மையமாகக் கொண்டு சாலையின் இருபுறமும் 10-கி.மீ தொலைவிற்கு மரங்கள் மக்கள் இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடவும் அறிவுறுத்தினார். உடன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வெம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், புதூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், புதூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, மாவட்ட நெசவாளர் அணி துணை தலைவர் லட்சுமணன் கிளைச் செயலாளர்கள் மாரிச்சாமி, பெரியசாமி மகளிர் அணி வசந்தா, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.