விளாத்திகுளம் அருகே  காடல்குடி  அரசு உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்று வரும் பராமரிப்பு பணியினை எம்எல்ஏ மார்கண்டேயன் ஆய்வு செய்தார்.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்   மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை நாடாளுமன்ற செல்வி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் செண்பகராமன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், கிளை துணைச் செயலாளர் சுரேஷ், புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.