தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்லட்சுமிபுரம் கிராமத்திற்கு சென்று மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்து, பின்னர் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலமாக வெளியேற்றும் பணியை தீவிர படுத்தினார். இந்நிகழ்வில் திமுக  ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்  கிராம பொதுமக்கள்,அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.