விளாத்திகுளம் அருகே புதிய பயணியர் நிழற்குடை கட்டடத்தினை MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நடுக்காட்டூர் கிராமத்தில்  சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.00-லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடை கட்டடத்தினை   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

.உடன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கீழஅருணாச்சலப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கண்ணன், புதூர் புதூர் பேரூர் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.