விளாத்திகுளத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ மார்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு எட்டையாபுரம் சாலையில் 5.60- லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பணியையும்,9-வது வார்டு பகுதியில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியினையும், ஒன்னாவது பார் ராஜூவ்நகர் பகுதியில் 27 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான பணியனையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்,வார்டு உறுப்பினர்கள் வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.