எட்டயபுரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 மற்றும் 11 வது வார்டு பகுதிகளில் 24 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி இயந்திரம் அமைப்பதற்கான பணியனையும், பாப்திஸ்து துவக்க பள்ளியில் ரூபாய் 13. 75 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டும் பணியினையும்,8 வது மற்றும் 15 வது வார்டுகளில் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி மகாராஜன், திமுக நகர செயலாளர் சங்கரநாராயணன், கோவில்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,மகளிர் அணி அமைப்பாளர் மஞ்சமாதா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.