விளாத்திகுளம் அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மெட்டில்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்கள்.மேலும் மெட்டில்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.